Friday 3rd of May 2024 02:44:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி!

விறுவிறுப்பான கட்டத்தில் இங்கிலாந்து மே.இந்தியத் தீவுகள் 2வது டெஸ்ட் போட்டி!


இங்கிலாந்து-மே.இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சுற்றுலா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 312 வெற்றி இலக்கை நோக்கி போட்டியின் இறுதி நாளான இன்றைய நாள் ஆட்டத்தை முன்னெடுத்து வருகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

சற்று முன்னர் வரை 52 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று ஆடி வருகிறது.

துடுப்பாட்டத்தில் பிளாக்வூட் 55 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் பொறுப்புடன் ஆடிவரும் ஷமர் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் ஹோல்டர் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் 5வது நாள் ஆட்டம் நிறைவு பெற இன்றும் 32 ஓவர்கள் உள்ள நிலையில் 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெற்று தொடரையும் வென்றுவிடலாம் என்பதற்கு அப்பால் விக்கெட் இழப்பை தடுத்து தோல்வியை தவிர்க்கும் நோக்கில் மிக கவனமுடன் இருவரும் ஆடிவருகின்றனர்.

எப்படியாவது எஞ்சிய 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி போட்டியை வென்று தொடரை சமநிலைக்கு கொண்டு வரும் முனைப்பில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்து வீசி வருகின்றமை போட்டியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE